ஆவியான எங்கள் அன்பு தெய்வமே

அடியோரை ஆட்கொண்டு நடத்துமே

 

ஆட்கொண்டு எங்களை அனலாக்கும்

அன்பினால் இன்று அலங்கரியும்…..

 

1.

ஜெபிக்க வைக்கும் எங்கள் ஜெபவீரனே

துதிக்கத் தூண்டும் துணையாளரே

சாத்தானின் சகல தந்திரங்களை

தகர்த்தெறிய வாரும் ஐயா  –   ஆட்கொண்டு

 

2.

சாவுக்கேதுவான எங்கள் சரீரங்களை

உயிர் பெறச் செய்பவரே

சரீரங்களின் தீய செயல்களையே

சாகடிக்க வாருமையா       –   ஆட்கொண்டு

 

3.

பெலன் இல்லாத நேரங்களில்

உதவிடும் துணையாளரே

சொல்லொண்ணா பெருமூச்சோடு

ஜெபித்திட வாருமையா        –   ஆட்கொண்டு

 

4.

மனதை புதிதாக்கும் மன்னவனே

மறுரூபமாக்குமையா

ராஜாவின் இரண்டாம் வருகைக்காக‌

எந்நாளும் ஏங்கச் செய்யு  இயேசு   –   ஆட்கொண்டு

 

5.

தேவாதி தேவனின் ஆழங்களை

ஆராய்ந்து அறிபவரே

அப்பாவின் திருச்சித்தம் வெளிப்படுத்தி

எப்போதும் நடத்தும் ஐயா –   ஆட்கொண்டு

 

6.

பாவம் நீதி, நியாயத்தீர்ப்பை

கண்டித்து உணர்த்தும் ஐயா

பரிபூரண உம் சத்தியத்திற்குள்

பக்தர்களை நடத்தும் ஐயா   –   ஆட்கொண்டு

 

7.

அன்பு, மகிழ்ச்சி, சமாதானம்

நீடிய பொறுமை, தயவு

விசுவாசம், நற்குணம், சாந்தம்

இச்சையடக்கம் தாருமையா     –   ஆட்கொண்டு

 



aaviyana engkal anbu theyvame

adiyorai aadkondu nataththume

 

aadkondu engkalai analakkum

anbinal inru alangkariyum…..

 

1.

jaெbikka vaikkum engkal jaெpavirane

thuthikkath thundum thunaiyalare

saththanin chakala dhanththirangkalai

dhakarththeriya varum aiya  –   aadkondu

 

2.

savukkethuvana engkal charirangkalai

uyir beras seypavare

charirangkalin thiya seyalkalaiye

sakadikka varumaiya       –   aadkondu

 

3.

belan illadha nerangkalil

udhavidum thunaiyalare

sollonna berumussodu

jaெbiththita varumaiya        –   aadkondu

 

4.

manathai buthithakkum mannavane

marurupamakkumaiya

rajaாvin irandam varukaikkaka‌

enth nalum eengkas seyyu  iyesu   –   aadkondu

 

5.

thevathi thevanin aazhangkalai

aaraynththu aripavare

abbavin thirussithdham velibpaduththi

ebbothum nataththum aiya –   aadkondu

 

6.

bavam nithi, niyayaththirbbai

kandiththu unarththum aiya

pariburana um chaththiyaththirkul

pakdharkalai nataththum aiya   –   aadkondu

 

7.

anbu, makizssi, chamathanam

nidiya borumai, dhayavu

visuvacham, narkunam, santhdham

issaiyatakkam tharumaiya     –   aadkondu